தமிழகத்தில் 1,500ஐ நெருங்கும் தினசரி கொரோனா!!

தமிழகத்தில் 1,500ஐ நெருங்கும் தினசரி கொரோனா!!

Update: 2022-06-27 06:45 GMT

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 1,500ஐ நெருங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு நேற்று பதிவானது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 25,591 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,68,344 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று மட்டும் 691 பேர் வீடு திரும்பினர். கொரோனா பாதித்து தற்போது 7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.  சென்னையில் 624 பேருக்கும், செங்கல்பட்டில் 241 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Similar News