தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !!

தமிழகத்தில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு.. இன்றைய முழு விவரம் !!

Update: 2022-02-15 20:31 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4.26 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 5.09 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பெரும் அளவில் குறைந்து வருவது மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,325 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 801 பேர் ஆண்கள், 254 பேர் பெண்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 39 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது.
 


சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 368 ஆக குறைந்துள்ளது. இன்று 14 பேர் உயிரிழந்துள்ளார்.  7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும்,  7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து  946ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,894 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 69 ஆயிரத்து 9073ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in


 

Similar News