அட கொடுமையே ! - 17 வயது சிறுமி கர்ப்பம்.. 12 வயது சிறுவன் போக்சோ கைது !!

அட கொடுமையே ! - 17 வயது சிறுமி கர்ப்பம்.. 12 வயது சிறுவன் போக்சோ கைது !!

Update: 2022-04-21 17:13 GMT

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு வழக்கமான வலி என்று கருதிய பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். 

ஆனால், அங்கு யாரும் எதிர்பாராத திருப்பமாக மாணவிக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கூறினர். பின்னர் வலி அதிகரிக்கவே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தன்னுடன் நெருக்கமாக பழகியதால் தான் கர்ப்பமானதாக தெரிவித்திருக்கிறார். இதனால்தான் தனக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது என்று போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார்.
 
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரிடமும் விசாரித்தனர். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 12 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in

 

Similar News