கொரோனாவால் மீண்டும் ஆபத்து... இந்தியாவை எச்சரிக்கைகும் நிபுணர்கள் குழு !!

கொரோனாவால் மீண்டும் ஆபத்து... இந்தியாவை எச்சரிக்கைகும் நிபுணர்கள் குழு !!

Update: 2022-03-12 18:34 GMT

உலகம் முழுவதும் கொரோனா எனும் பெருந்துதொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது அதில் இருந்து மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். ஏன், ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

அந்த வகையில், இந்தியாவில் தற்போது கொரோனா 3ஆவது அலையின் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தினசரி 4 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. அடுத்ததாக கொரோனா நான்காவது அலை உருவாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் 3ஆவது அலை பாதிப்பு குறைந்தாலும் பொதுமக்கள் டிசம்பர் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கோவிட் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அக்குழுவின் அதிகாரிகள் கூறியதாவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுதல் ஆகியவற்றை கட்டாயமாக்க வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்தாலும், குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதி வரை முகக்கவசம் அணியுங்கள். டிசம்பர் வரை இந்த விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தொற்றுநோய் முற்றிலும் நீங்கிவிட்டதாக நாங்கள் நம்பும் வரை மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்களது கருத்தாகும். தொற்று நோயின் முடிவு குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கும். அதைத் தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும். ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே கொரோனாவின் 4ஆவது அலை பற்றிய கணிப்புகள் உள்ளன.

அதன்பிறகு குறைந்தது 2 மாதங்கள் வரை கொரோனா பாதுகாப்பு விதிகள் தொடர வேண்டும். அதாவது அடுத்த 6 மாதங்கள் முக்கியமானதாக இருக்கும். இதனால் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது முக்கியமாகும். முகக்கவசம் அணிவதைத் தவிர வேறு வழியில்லை, என கூறினர்.

 

newstm.in


 

Similar News