வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்து.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!
வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்து.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு..!
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது, “வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லை என்றால் நாட்டில் ஊழல் இருந்திருக்காது, எமர்ஜென்சி இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள்.
நம் நாட்டு மக்கள் கொரோனா பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் கூட கவனிப்பதில்லை.
எதிர்க்கட்சியான பிறகு நாட்டைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது” என்றார்.