உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து.. இன்னும் 5 நாள்தான் டைம் இருக்கு..!
உங்க ரேஷன் கார்டுக்கு ஆபத்து.. இன்னும் 5 நாள்தான் டைம் இருக்கு..!
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பலன்களைப் பெற்று வருகின்றனர்.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கடையிலிருந்தும் ரேஷன் பொருட்களை பெறலாம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி முன்னதாக 2022 மார்ச் 31 ஆக இருந்தது. ஆனால், மத்திய அரசு அதை 2022 ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி, நீங்களே உங்களுடைய ரேஷன் கார்டை ஆன்லைன் மூலம் ஆதாருடன் இணைத்துக் கொள்ளலாம்.
1. முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற வெப்சைட் செல்லவும்.
2. இப்போது ‘Start Now’ என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
4. இப்போது ‘Ration Card Benefit’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
5. அதன் பிறகு ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
6. உங்கள் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும். அதை நிரப்பி submit கொடுத்தால் போதும்.
ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக சென்று இணைக்க விரும்பினால், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டு தாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்கள் ஆதார் அட்டை பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பை ரேஷன் கார்டு மையத்தில் செய்து கொள்ளலாம். ஆனால், நீங்கள் அதை ஜூன் 30-ம் தேதிக்கு முன் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.