பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில், வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

இதில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வரும் 2-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" data-style="border: 0px; overflow: hidden;" data-width="640">Full View

Tags: