மாணவி ஸ்ரீமதி மரணம்.. 7 பேர் குற்றவாளிகள்.. தந்தை பரபரப்பு பேட்டி..!

மாணவி ஸ்ரீமதி மரணம்.. 7 பேர் குற்றவாளிகள்.. தந்தை பரபரப்பு பேட்டி..!

Update: 2022-07-24 20:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி மரணமடைந்தார்.

மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோர்ட் உத்தரவால் மாணவியின் உடல் மறு கூராய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்ட நிலையில், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் சற்றுமுன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் அளித்த பேட்டியில், “நான், என் மகளை புதைக்கவில்லை; விதைத்திருக்கிறேன்.

அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள். இனியும் இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது.

என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் குற்றவாளிகள். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். தமிழக அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது. நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

Similar News