சாலை விதியை மீறிய டெலிவரி பாய்ஸ்… ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு!!

சாலை விதியை மீறிய டெலிவரி பாய்ஸ்… ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு!!

Update: 2022-04-01 06:30 GMT

போக்குவரத்து விதியை மீறிய உணவு டெலிவரி செய்யும் வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த போலீஸார் ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் ஏராளமான மொபைல் ஆப் உணவு விநியோக சேவைகள் (ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்றவை) செயல்பட்டு வருகின்றன. இந்த சேவை பிரபலமாகி வருவதால், உணவு விநியோக பணியாளர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த மொபைல் ஆப் அடிப்படையிலான உணவு விநியோகச் சேவைகளில் பெரும்பாலானவை மிகக் குறுகிய நேரத்தில் உணவை வழங்குவதாக உறுதியளிக்கின்றன. இது உணவை விநியோகம் செய்பவர்கள் விரைவாக வாகனம் ஓட்டுவதற்கு நெருக்கடி கொடுக்கிறது.

பெரும்பாலான உணவு விநியோக வாகன ஓட்டிகள் சிக்னல் மீறல், எதிர் திசையில் வாகனம் ஓட்டுதல், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது கைபேசிகளைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வேகத்தில் சென்று பணம் சம்பாதிக்கும் நோக்கத்தினால் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர்.

இந்த விதிமீறல்களை குறைக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக ஹெல்மெட் அணியாதது மற்றும் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது போன்றவற்றைக் கண்டறிந்து, சிறப்பு வாகன தணிக்கை சென்னை பெருநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த சிறப்பு தணிக்கையின் போது 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஸ்விக்கி, சுமோட்டா, டன்சோ போன்ற நிறுவனங்களின் வாகன ஓட்டிகள் அதிகளவில் விதி மீறல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

newstm.in

Similar News