திருப்பதியில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசை!!

திருப்பதியில் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசை!!

Update: 2022-05-29 07:28 GMT

திருப்பதி கோவிலில் கூட்டம் அதிகம் வருவதால் பக்தர்கள் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறதுஇதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருப்பதால் சுமார் 7 கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசை காத்திருக்கிறது. இலவச தரிசனம் செய்ய 48 மணி நேரமாகிறது. குறிப்பாக விஐபி பக்தர்கள். சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை யாத்திரை திட்டத்தை மாற்றி அமைத்து கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்வழக்கமாக விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகம் வரும் என்றாலும் தற்போது கொரோனா முடக்கத்திற்கு பிந்தைய கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதனால் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

newstm.in

Similar News