பக்தர்கள் அதிர்ச்சி..!! கோயில் விழாவில் வேட்டைக்கு சென்ற சாமியாடி உயிரிழப்பு ..!!

பக்தர்கள் அதிர்ச்சி..!! கோயில் விழாவில் வேட்டைக்கு சென்ற சாமியாடி உயிரிழப்பு ..!!

Update: 2022-05-30 13:36 GMT

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் கொடை விழா நடைபெற்றது. இரவு 1.30 மணியளவில் சாமக்கொடை நடைபெற்றது.

அப்போது தெய்வச் செயல்புரம் பகுதியைச் சேர்ந்த சாமியாடி முருகன் (65) என்பவர் வேட்டைக்குச் சென்றார். சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாமியாடி முருகனின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News