தமிழ் திரைத்துறையில் தோனி.. முதல் படத்திலேயே நயன்தாரா !!
தமிழ் திரைத்துறையில் தோனி.. முதல் படத்திலேயே நயன்தாரா !!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. இவர் தமிழக ரசிகர்களாலும் ஏன் மக்களாலும் கொண்டாடப்படுபவர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தாலும் தோனி களத்தில் கலக்கி வருகிறார். இவர் தனது கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என கூறியிருந்தார்.
இதனால் அவர் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவாரா? அல்லது இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தோனி விரைவில் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. இதற்காக ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கி விட்டதாகவும் இந்த நிறுவனத்தின் மேலாளராக ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தோனியின் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம், தமிழ் திரைப்படம் என்றும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
newstm.in