வைரலாகும் தோனியின் புதிய வீடியோ!!

வைரலாகும் தோனியின் புதிய வீடியோ!!

Update: 2022-02-08 09:11 GMT

ஐபிஎல் நெருங்கி வருவதை அடுத்து சிஎஸ்கே கேப்டன் தோனி தனது வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார்.

ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த முறையும் தோனி அணி சிஎஸ்கே அணியில் உள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும் என சென்னைக்கு வந்து திட்டம் வகுத்து கொடுத்தார் தோனி. இந்நிலையில் அவர் ஐபிஎல் போட்டிகளுக்கு தற்போதே தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.

தனது சொந்த ஊரான ராஞ்சியில் வலைக்குள் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதுவும் இந்த முறை அதிரடிக்கு தயாராகாமல், முழுக்க முழுக்க பவுண்டரி ஷாட்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Full View

தோனிக்கு 2022ஆம் ஆண்டு தொடரே கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் தான் தனது கடைசி போட்டி இருக்கும் என அவர் கூறியிருந்த நிலையில் இந்தியாவில் முழு போட்டியை நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துவிட்டது.

அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

newstm.in

Similar News