செங்கல் வியாபாரி கண்டெடுத்த வைரம்.. என்ன விலைக்கு ஏலம் போனது தெரியுமா..?

செங்கல் வியாபாரி கண்டெடுத்த வைரம்.. என்ன விலைக்கு ஏலம் போனது தெரியுமா..?

Update: 2022-03-01 04:30 GMT

மத்திய பிரதேச மாநிலத்தின் பன்னா மாவட்டத்தில் ஏராளமான வைர சுரங்கங்கள் உள்ளன. இவற்றை, மத்திய அரசின்கீழ் செயல்படும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் நிர்வகித்து வருகிறது.

சமீபத்தில் இங்கு, செங்கல் சூளை வைத்துள்ள சுஷில் சுக்லா என்பவர், கிருஷ்ணா கல்யாண்பூர் என்ற பகுதியில் உள்ள சிறிய சுரங்கத்தில் வைரத்திற்காக நிலத்தை தோண்டினார். அப்போது, 26.11 காரட் வைரம் ஒன்றை அவர் கண்டெடுத்தார். அதை, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், கடந்த 24, 25 ஆகிய இரண்டு நாட்களும் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட வைரங்கள் ஏலம் விடப்பட்டன. அதில், சுஷில் ஷுக்லா கண்டெடுத்த வைரம் அதிகபட்சமாக 1.62 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் போனது.

இதைத்தவிர, 87 சிறிய வைர கற்கள் மொத்தமாக 1.89 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகின. 'ராயல்டி' மற்றும் வரி ஆகியவை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை சுக்லாவுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News