அரசியல் பிரவேசம் தொடங்கியதா? - பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சந்திப்பு?
அரசியல் பிரவேசம் தொடங்கியதா? - பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சந்திப்பு?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நடிகர் விஜய் வலம் வருகிறார். பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அவர் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், நடிகர் விஜய் இதுவரை எப்போது தனது அரசியல் பயணம் குறித்து ஓபனாக கூறியது கிடையாது. இந்த நிலையில், தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியானது நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு முக்கிய பங்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது பற்றி எந்தவித புகைப்படங்களும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்திக்கவில்லை என்று விஜய் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தற்போது விஜய் சென்னையில் இல்லை எனவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்தாக இருந்த சர்ச்சைக்கு விஜய் தரப்பில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
newstm.in