பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை.. சாலையில் சென்றவரை தாக்கிய கோவை இளைஞர்

பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை.. சாலையில் சென்றவரை தாக்கிய கோவை இளைஞர்

Update: 2022-04-11 17:07 GMT

பிறந்தநாள் வாழ்த்து கூறாததால் சாலையில் சென்ற வாகனஓட்டியை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் புள்ளாக் கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (26). சரக்கு வாகன டிரைவராக வேலை பார்க்கிறார். பிரேம்குமார்  நரசீபுரம் அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தனது வாகனத்தை ஓட்டியப்படி சென்றுள்ளார். 

அப்போது அங்கு நரசீபுரம், காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஹரிபிரசாத் (27) தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த குஷியில் இருந்தவர்களில், பிரேம்குமாரின் வாகனத்திற்கு எதிரே ஹரிபிரசாத் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். மேலும் பிரேம்குமாரிடம் தன்னுடன் வந்த அருண்குமார் என்பவருக்கு இன்று பிறந்தநாள் என்றும் அவருக்கு வாழ்த்து சொல்லுமாறு கூறியுள்ளார். 

ஆனால், அருண்குமார் யார் என்றே தெரியாது, பின்னர் எப்படி பிறந்தநாள் வாழ்த்து கூறமுடியும் என்று பிரேம்குமார் கூறிவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பிறந்தநாள் வாழ்த்து கூறாததால் ஆத்திரம் அடைந்த ஹரிபிரசாத் பைக்கில் தனது நண்பருடன் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று பிரேம்குமார் வாகனத்தை வழி மறைத்துள்ளார். 

மேலும் பிரேம்குமாரை, தகாத வார்த்தையால் திட்டி, அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது, பிரேம்குமார் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில், ஹரிபிரசாத்தை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Similar News