இன்று முதல் டீசல் ஆட்டோக்கள், பேருந்துகளுக்கு தடை!!

இன்று முதல் டீசல் ஆட்டோக்கள், பேருந்துகளுக்கு தடை!!

Update: 2022-04-01 09:10 GMT

பீகார் மாநிலத்தில் இன்று முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பாட்னாவில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு டீசலை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகள், ஆட்டோக்களை இயக்குவதற்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது.

ஆனால், கொரோனா காரணமாக அந்த முடிவு தள்ளிப்போனது. இந்த நிலையில், இன்று முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு தடை விதிப்பதாக அம்மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இந்த முடிவால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

newstm.in

Similar News