வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் நெல்சன்!!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் நெல்சன்!!
நயன்தாரா நடிப்பில் `கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயன் நடிப்பில் `டாக்டர்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் நெல்சன், விஜயை வைத்தி பீஸ்ட் படத்தை இயக்கினார்.
கடந்த 13ஆம் தேதி வெளியான பீஸ்ட் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பீஸ்ட் வெளியாவதற்கு முன்னதாகவே ரஜினி நடிக்கும் 169ஆவது படத்தை நெல்சன் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
`பீஸ்ட்' வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், படம் பற்றிய சில நெகட்டிவ் கருத்துகள் பலராலும் பகிரப்பட்டது. இதனால் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது சந்தேகம் தான் என சில வதந்திகள் உலவி வந்தன.
இதனை மறுக்கும் விதமாக தனது ட்விட்டர் பயோவில், தான் இயக்கத்தில் உருவான படங்களின் பட்டியலில் `தலைவர் 169' என்பதையும் சேர்த்திருக்கிறார். எனவே இதன் மூலம் ரஜினி படத்தை இயக்குவதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதி செய்திருக்கிறார்.
newstm.in