முதல்வருடன் கருத்து வேறுபாடு.. பதவியை ராஜினாமா செய்தார் மூத்த அமைச்சர்..!
முதல்வருடன் கருத்து வேறுபாடு.. பதவியை ராஜினாமா செய்தார் மூத்த அமைச்சர்..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தனக்கு ஒதுக்கும்படி, மூத்த அமைச்சர் சிங் தியோ தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். முதல்வர் பூபேஷ் பாகேல் இதை ஏற்கவில்லை.
இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது. இந்நிலையில், தன் வசம் இருந்த பஞ்சாயத்து துறையை ராஜினாமா செய்வதாக, சிங் தியோ நேற்று அறிவித்தார்.
ஆனாலும், சுகாதாரம், மருத்துவக் கல்வி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக சிங் தியோ தொடர்கிறார். சிங் தியோவின் இந்த அறிவிப்பு காரணமாக சத்தீஸ்கர் காங்கிரசில் பரபரப்பு நிலவுகிறது.