பேரிழப்பு.. ரொனால்டோவின் குழந்தை மரணம்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்

பேரிழப்பு.. ரொனால்டோவின் குழந்தை மரணம்.. கண்ணீர் கடலில் ரசிகர்கள்

Update: 2022-04-19 16:30 GMT

கால்பந்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கி வருபவர் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது நடைபெற்று வரும் ப்ரீமியர் லீக் தொடரில் கோல் மழை பொழிந்து வருகிறார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும் ரொனால்டோ உள்ளார். 

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளன. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தான் ரொனால்டோ குடும்பத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை இரட்டைக் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியடைந்தார். அதன்படி அவரது காதலி ஜார்ஜினாவுக்கு அண்மையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதில் ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக ரொனால்டோ தமது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

பெற்றோராக தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், எனினும் பெண் குழந்தை தற்போது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், " ஆழ்ந்த சோகத்துடன் எங்களின் ஆண் குழந்தை இறந்துவிட்டதை தெரிவிக்கிறேன். இந்த வலியை அனைத்து பெற்றோர்களும் உணர முடியும். பெண் குழந்தைதான் தற்போது எங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் கொடுக்கிறது.
 


எனது குழந்தையை காப்பாற்ற முயன்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி. இந்த இழப்பினால் நொந்துபோயுள்ள எங்களின் தனிமையை உறுதி செய்ய வேண்டுகிறேன். எங்களின் ஆண் குழந்தை , நீ எங்களின் தேவதை, உன் மீது எப்போதும் அன்பு செலுத்துவோம், என தெரிவித்துள்ளார்.
 

newstm.in

Tags:    

Similar News