ரவுடிகளுக்கு மாவு கட்டு… தப்ப முயன்ற போது விபரீதம்!!
ரவுடிகளுக்கு மாவு கட்டு… தப்ப முயன்ற போது விபரீதம்!!
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் சங்கர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற நான்கு பேர் லாரியை மடக்கி ஓட்டுனரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளனர்.
இதனை கண்ட பொதுமக்கள் பொழிச்சலூர் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வழிப்பறி நபர்களை பிடிக்க முயன்றபோது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
ஒருவரை மட்டும் பிடிக்க முயன்ற போலீசார் விரட்டி பிடித்த போது சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் அந்த நபரை விசாரித்த போது பம்மல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சத்யா(எ) பம்மல் சத்யா (23) என்பதும், அவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட, கொலை முயற்சி, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட மற்ற நபர்கள் அனைவரும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
உடனே கூடுவாஞ்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சென்ற போலீசார் அங்கு தங்கியிருந்த நபர்களை பிடிக்க முற்பட்ட போது இரண்டாம் மாடியில் இருந்து குதித்து தப்பிக்கும் போது ஒருவருக்கு கை முறிவு ஏற்பட்டது.
அதன் பிறகு இருவரையும் கை செய்து விசாரித்ததில் பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நவீன் (20) மற்றும் கருணாகரன் (20) என தெரியவந்தது. இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
newstm.in