சார்ஜ் செய்தபோது விபரீதம்.. வெடித்தது பேட்டரி.. 17 ஸ்கூட்டர்கள் சேதம்..!

சார்ஜ் செய்தபோது விபரீதம்.. வெடித்தது பேட்டரி.. 17 ஸ்கூட்டர்கள் சேதம்..!

Update: 2022-04-14 13:43 GMT

சென்னை குன்றத்தூர் பிரதான சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் ஷோரூம் ஒன்று உள்ளது. இங்கு, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷோரூமில் இருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அங்கிருந்த ஊழியர்கள் சார்ஜ் செய்துள்ளனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் வாகனத்தின் பேட்டரி வெடித்து தீ பிடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே ஷோரூமை விட்டு வெளியே வந்தனர்.

ஷோரூம் முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த 17 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீயில் கருகி நாசமானது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக எலெக்ட்ரிக் பைக்குகள் சார்ஜ் செய்யும் போது அதன் பேட்டரிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் எலெக்ட்ரிக் பைக் வாங்குவோர் அச்சமடைந்துள்ளனர்.

Similar News