பனிப்பாறை கடலில் 10,000 அடிக்கு கீழே மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!!

பனிப்பாறை கடலில் 10,000 அடிக்கு கீழே மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!!

Update: 2022-03-10 20:37 GMT

அண்டார்டிக் கடல் பனிப்பாறைகளுக்கு இடையில் சிக்கி மூழ்கி கப்பல் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1915 நவம்பர் மாதம் அண்டார்டிகாவை முதன்முதலில் கடக்க முயற்சித்த போது, ​​மூன்று பாய்மரக் கப்பல் காணாமல் போனது. 144 அடி நீளமுள்ள மரக்கப்பலின் சிதைவுகளைக் கண்டறிவதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இருப்பினும், ‘எண்ட்யூரன்ஸ்22’ பணிதிட்டம் நவீன உபகரணங்கள் உதவியுடன் கப்பலின் சொச்சங்களைக் கண்டுப்பிடித்தது. பனிப்பாறைகளில்ல் சிக்கித் தவித்த போதிலும், "எண்ட்யூரன்ஸ்" இன் 28 பேர் கொண்ட குழுவினர் உயிருடன் திரும்பிய அதிசயம் நிகழ்ந்தது.

நான்காவது மீட்பு முயற்சியில், ஷேக்கில்டன் 1916-ல் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இம்பீரியல் டிரான்ஸ்-அண்டார்டிக் பயணம் லண்டனை விட்டு கிளம்பி 2 ஆண்டுகளுக்குப் பிறகு எலிஃபண்ட் தீவில் இருந்து மீதமுள்ள குழுவினரை அழைத்து வர முடிந்தது.

newstm.in

Similar News