காலில் விழவைத்து அவமரியாதை.. எம்ஜிஆர் விவகாரம்.. இபிஎஸ்-க்கு கண்டனம் !!
காலில் விழவைத்து அவமரியாதை.. எம்ஜிஆர் விவகாரம்.. இபிஎஸ்-க்கு கண்டனம் !!
எம்.ஜி.ஆர் வேடமணிந்து காலில் விழுந்தவரை தடுக்கத் தவறியதாக எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சசிகலா தென்மாவட்டங்களுக்கு ஆன்மிக பயணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சென்றிருந்தார். சசிகலாவை திருச்செந்தூரில் ஓபிஎஸ் இன் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசினார். இது அதிமுகவில் புயலை கிளப்பியது. அப்போது, மரியாதை நிமித்தமாக சசிகலாவை சந்தித்ததாகவும், அதிமுகவுக்கு சசிகலா தலைமை தாங்க வேண்டும் எனவும் ஓ.ராஜா கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
முன்னதாக, தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதிமுக முன்னாள் ஆறுகுட்டியும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், எம்ஜிஆர்-ஐ அவமரியாதை செய்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மாவட்ட எம்ஜிஆர் புரட்சி சங்கம் சார்பில் விழா மேடையில், எம்ஜிஆர் வேடம் அணிந்தவர் காலில் விழுந்ததை தடுக்கத் தவறினார். இதன் மூலம் எம்ஜிஆர்-ஐ அவமரியாதை செய்ததாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பங்கேற்று கண்டன உரையாற்றினார். எம்.ஜி.ஆர் புரட்சி சங்க பொதுச் செயலாளர் கோவை சண்முகம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். எம்ஜிஆர் வேடம் அணிந்தவர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்ததை குறிப்பிட்டு பல இடங்களில் சுவரொட்டி ஒட்டியும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
newstm.in