செருப்பு வாங்குவதில் தகராறு.. உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு !!

செருப்பு வாங்குவதில் தகராறு.. உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு !!

Update: 2022-02-13 18:00 GMT

காலணி வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அடுத்த மோகன் ராவ் காலனியைச் சேர்ந்தவர் பைசு. இவர் அண்ணா சிலை அருகே காலனி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் 1,500 ரூபாயிக்கு பைசு கடையில் செருப்பு வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் கடைக்கு வந்த லோகேஷ் செருப்பு வேண்டாம் பணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பைசு பணத்தை திரும்ப தர இயலாது வேண்டுமானால் வேற செருப்பை வாங்கி செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லோகேஷை பைசு மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியத்தில் லோகேஷ்-க்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த லோகேஷ் பதில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில், இன்று காலை பைசு வழக்கம்போல் தனது கடையை திறக்க வந்துள்ளார். அங்கு வந்த லோகேஷ் தான் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து லோகேஷை கீழே தள்ளி விட்டு, பைசு சாலையில் ஓடியுள்ளார். எனினும் விடாமல் சாலையில் ஓட ஓட துரத்தி வெட்டியுள்ளார். இதில் பைசுக்கு கை மற்றும் தோளிலில் பலமாக வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள லோகேஷை தேடி வருகின்றனர். செருப்பு பிரச்சனையில் ஒருவரை சாலையில் ஓட ஓட துரத்தி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News