பணத்தை பிரிப்பதில் தகராறு.. இரும்பு கம்பியால் இளைஞர் அடித்துக்கொலை !!

பணத்தை பிரிப்பதில் தகராறு.. இரும்பு கம்பியால் இளைஞர் அடித்துக்கொலை !!

Update: 2022-06-04 08:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கவுரிபேட்டை கம்பர் தெருவை சேர்ந்த மனோஜ் (25), என்பவர் சொந்தமாக ட்ராக்டர் வைத்து குடியிருப்பு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழிலில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம் போல் ஆவடி  பகுதியில் மனோஜ் தண்ணீர் வினியோகம் செய்து கொண்டிருந்தார். பின்னர் மற்றொரு குடியிருப்புக்கு மனோஜ்  டிராக்டரில் செல்லும்போது அதேபகுதியைச் சேர்ந்த பிரபு சதீஸ் உள்பட மூன்று பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் எதிர்பாராதவிதமாக திடீரென இரும்பு ராடால் மனோஜ் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த மனோஜ்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனோஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த பிரபு சதீஸ், பட்டாபிராமை சேர்ந்த கலையரசன்  உள்ளிட்ட 3 பேர்  மனோஜை  இரும்பு தடியால் அடித்துக் கொண்றது அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது .அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் பிரபு சதீஸ் உட்பட 3 பேர் திருவள்ளூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விசாரணையில், ஏற்கனவே பிரபு சதீஸ், மனோஜ்  உள்ளிட்ட 3 பேருக்கு தண்ணீர் விற்ற பணம் 10,000 பங்கு போடுவதில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. இதனிடையே சரணடைந்தவர்களை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News