பொதுக்குழுவில் ஈபிஎஸ் செயலால் அதிருப்தி.. மீண்டும் எழுச்சிபெறும் ஓபிஎஸ் !!
பொதுக்குழுவில் ஈபிஎஸ் செயலால் அதிருப்தி.. மீண்டும் எழுச்சிபெறும் ஓபிஎஸ் !!
பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நடந்த சம்பவம் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வரும் நாட்களில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டித் தேவன்வலசையில் ஒன்றிய கவுன்சிலர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளை செயல்பட்டதாகக் கூறி அப்போது கண்டன முழக்கங்கள் எழுப்பினர். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தவர்கள் திடீரென அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோன்று, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக நகரச் செயலர் பாஸ்கரன் என்பவர் பேனர் வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் , அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்ததை , தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் , அம்மாவின் உண்மை விசுவாசியான ஒபிஎஸ்க்கு இனி என்னுடைய ஆதரவு எனவும் , மேலூர் அதிமுக நகர கழக செயலாளர் பாஸ்கரன் என்பவர் மேலூர் பேருந்து நிலையம் அருகே பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in