போக்குவரத்து நெரிசலால் டைவர்ஸ்.. முன்னாள் பாஜக முதல்வரின் மனைவி கருத்து !

போக்குவரத்து நெரிசலால் டைவர்ஸ்.. முன்னாள் பாஜக முதல்வரின் மனைவி கருத்து !

Update: 2022-02-06 08:18 GMT

மும்பையில் போக்குவரத்து நெரிசலால் 3 சதவீதம் அளவுக்கு விவாகரத்து நடைபெறுவதாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சரின் மனைவி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகராஷ்டிராவில் தற்போது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக உள்ள பாஜக தொடர்ந்து சிவசேனா அரசை விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பேசிய அம்ருதா ஃபட்னாவிஸ், நான் இதை ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். நான் வெளியே சென்றவுடன் பள்ளங்கள், போக்குவரத்து  நெரிசல் உட்பட பல சிக்கல்களைப் பார்க்கிறேன். போக்குவரத்து காரணமாக, மக்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரம் செலவளிக்க முடியவில்லை. இதனாலேயே மும்பையில் 3% விவாகரத்துகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். பாஜக முன்னாள் முதலமைச்சரின் மனைவி பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

அம்ருதா ஃபட்னாவிஸ்க்கு பதில் அளித்த, சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதூர்வேதி, 3% மும்பைவாசிகள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த (IL)Logic award வழங்கப்படுகிறது. பெங்களூருவை  சேர்ந்தவர்கள் இத்தகைய தகவல்களை படிக்காதீர்கள். அது உங்கள் திருமண வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.   

ஒருசிலர் அம்ருதா ஃபட்னாவிஸிடம் அவரது கூற்று தொடர்பான ஆவணங்கள் உள்ளதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருசிலர், விவாகரத்து வழக்கறிஞர்கள் பெங்களூருவில் உள்ள சில்க் போர்டு சிக்னலில் கடையை அமைத்தது ஏன் என்பது இப்போது விளங்குகிறது என்று கலாய்த்துள்ளார். இப்படி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


newstm.in

Tags:    

Similar News