பகல் நேரத்தில் வரக்கூடாது.. அரசு பஸ்களுக்கு எஸ்பி அதிரடி உத்தரவு..!
பகல் நேரத்தில் வரக்கூடாது.. அரசு பஸ்களுக்கு எஸ்பி அதிரடி உத்தரவு..!
புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக உள்ளதால், தமிழக அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் புதுச்சேரியில் டீசல் நிரப்பிக்கொள்ள உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி சாரத்தில் உள்ள கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்கில் தமிழக அரசு பஸ்கள் டீசல் நிரப்ப வரிசை கட்டியதால், காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, போக்குவரத்து கிழக்கு எஸ்பி மாறன், தமிழக அரசு போக்குவரத்துக் கழக உப்பளம் டிப்போ நிர்வாகிகளை அழைத்து பேசினார்.
அப்போது, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக அரசு பஸ்கள் சாரம் பெட்ரோல் பங்கிற்கு வரக்கூடாது. இரவு 8 மணிக்கு பிறகு டீசல் நிரப்ப வர வேண்டும் என உத்தரவிட்டார்.