ஓடும் ரயிலில் இதை செய்யாதீங்க.. பயணிகளுக்கு ரயில்வே எச்சரிக்கை..!
ஓடும் ரயிலில் இதை செய்யாதீங்க.. பயணிகளுக்கு ரயில்வே எச்சரிக்கை..!
'உரிய காரணங்கள் இன்றி, ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், ஓராண்டு சிறை தண்டனை' என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘ஓடும் ரயில்களில், உரிய காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததற்காக 1369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 1,043 பயணிகள் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் 7.11 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பயணிகள், தேவையற்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதை தவிர்க்க வேண்டும். பயணத்தின்போது அவசர உதவி, குறைகள் இருந்தால், ரயில்வே ஊழியர் அல்லது டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அல்லது, 139 என்ற ரயில்வே உதவி மைய எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். railmadad என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமும் தகவல்களை தெரிவிக்கலாம். இந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதை விடுத்து, உரிய காரணமின்றி பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், ஒரு ஆண்டு சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.