கோவிலுக்குள் எங்களை விடலை, ... நடுரோட்டில் குழந்தைகளுக்கு காது குத்திய பெண் !!

கோவிலுக்குள் எங்களை விடலை, ... நடுரோட்டில் குழந்தைகளுக்கு காது குத்திய பெண் !!

Update: 2022-02-12 15:00 GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் என்பவரது மனைவி கௌரி.  இவர் அந்த பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வெண்ணியம்மன் ஆலயத்திற்கு சென்று தனது உறவினர்களுடன் அவரது குழந்தைகளான ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோருக்கு பொங்கலிட்டு, மொட்டையடித்து, காது குத்துவததற்காக சென்றார்.

அப்போது அவர் கோவிலின் உள்ளே பொங்கல் பானையில் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கும்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பிரிவினர் வந்து கௌரியை கோவிலிலிருந்து வெளியே துரத்தியதுடன், பொங்கல் பானைகளை தூக்கி நடுரோட்டில வீசியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் கௌரியின் உறவினர்கள் பொங்கல் பானையை சாலையில் தூக்கி வீசியவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
தகவலறிந்து பெரியதச்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். பின்பு கௌரி தனது குழந்தைகளை கோயிலின் எதிரில்  நடுரோட்டில் அமர வைத்து மாலையிட்டு உறவினர்கள் முன்னிலையில் காதணி விழா நடத்தினார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News