இந்த பதிவெண் பலகை பொருத்த வேண்டாம்.. ஐகோர்ட்டில் அரசு அபிடவிட் மனு தாக்கல்..!

இந்த பதிவெண் பலகை பொருத்த வேண்டாம்.. ஐகோர்ட்டில் அரசு அபிடவிட் மனு தாக்கல்..!

Update: 2022-04-20 05:30 GMT

மத்திய அரசின் உத்தரவின் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி முதல் சாலைகளில் இயங்கும் வாகனங்களில் ஹெச்.எஸ்.ஆர்.பி. எனப்படும் அதிநவீன பதிவு எண் பலகை பொருத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது.

வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் டீலர்கள், வாகனத்தின் விவரங்கள் அடங்கிய தகவல்கள் அந்த அதிநவீன பதிவு எண் பலகையில் இடம்பெற்றிருக்கும்.

அதன் பேரில், வாகன ஓட்டிகள் அந்த அதிநவீன பதிவு எண் பலகையை வாகனங்களில் பொருத்தி வந்தனர். இந்நிலையில், 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு வாங்கப்பட்ட 1.76 கோடி பழைய வாகனங்களிலும் இந்த அதிநவீன எண் பலகையை பொருத்த வேண்டும் என்று அரசு திடீரென உத்தரவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர் சிலர், ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில், நேற்று மீண்டும் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன் இவ்வழக்கின் விசாரணை நடந்தது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகனங்களுக்கு அதிநவீன பதிவு எண் பலகையை பொருத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்பப் பெறுகிறது என்று கூறி, அதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். அரசின் முடிவை ஏற்றுக்கொண்ட கர்நாடக ஐகோர்ட், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Similar News