ஓவர் பில்டப் வேண்டாம்.. வெளியே போகணும்னா போயிடுங்க: பாஜகவுக்கு அப்பாவு வைத்த குட்டு..!

ஓவர் பில்டப் வேண்டாம்.. வெளியே போகணும்னா போயிடுங்க: பாஜகவுக்கு அப்பாவு வைத்த குட்டு..!

Update: 2022-02-08 12:42 GMT

நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார். அடுத்த சில வினாடிகளில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எழுந்து பேசினார்.

அப்போது சபாநாயகர், “உங்கள் கருத்தை பேசுவதற்கு நான் அனுமதி தருகிறேன். அதனால் நீங்கள் உட்கார்ந்து பேசி விட்டு செல்லலாம் என கூறினார். முதலில் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.

இருந்தபோதிலும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேரவையில் குறுக்கிட்டு பேசினார். அப்போது அவர், “ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தும் வகையில் கவர்னர் கருத்து தெரிவிக்கவில்லை” எனக் கூறினார்.

தொடர்ந்தும் குறுக்கிட்டு பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை நோக்கி சபாநாயகர் அப்பாவு, “வெளியே போறதுக்கு இவ்ளோ பில்டப் வேண்டாம்; போக நினைத்தால் போய்விடுங்கள்” என்று கூறினார்.

இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Similar News