“பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள்” : மத்திய அரசு!!

“பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடாதீர்கள்” : மத்திய அரசு!!

Update: 2022-04-23 21:00 GMT

தவறான மற்றும் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடுவதை தனியார் சேனல்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், சில தனியார் சேனல்கள் பரபரப்பு, சர்ச்சை மற்றும் தவறான செய்திகளை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சில ஊடகவியாளர்களும், ஊடகங்களும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தரும் தகவலை திரித்தும், தவறாகவும் செய்தி வெளியிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடமேற்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக சில சேனல்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிட்டன, இது ஏற்கதக்கது அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் டிவி செய்தி சேனல்களின் விவாதங்களில் அநாகரீகமான ஏற்றுக்கொள்ளாத வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதையும் சேனல்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

எனவே, 1995 சட்ட விதிக்கு மாறாக எந்த செய்தியையும் தகவலையும் டிவி சேனல்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News