இந்த அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..!
இந்த அறிகுறி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்..!
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெறுவது அவசியம்.
அவர்களை பரிசோதித்து விட்டு பாதிப்பு எதுவும் இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பலாம். அறிகுறி இருந்தால் அவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். ஒரு குழந்தைக்கு பாதிப்பு இருந்தால் அது நூற்றுக்கணக்கான குழந்தைகளை பாதிக்கும்.
எனவே, சிறிய அளவில் சளி, இருமல், காய்ச்சல் தானே என்று அலட்சியமாக இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டு மற்ற குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.