ஆதார் கார்டை காட்ட கூடாது.. டவுன்லோடு செய்ய வேண்டாம்.. அரசு திடீர் எச்சரிக்கை

ஆதார் கார்டை காட்ட கூடாது.. டவுன்லோடு செய்ய வேண்டாம்.. அரசு திடீர் எச்சரிக்கை

Update: 2022-05-29 16:58 GMT

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் என்பது மிகவும் அவசியமான மற்றும் கட்டாயமான ஒன்றாகும். அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அனைவருமே ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
 
ஆதார் கார்டை வைத்து கடன் கூட வாங்கலாம். வங்கிகளில் கடன் பெறுவதற்கு கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பு நடைமுறையில் ஆதார்தான் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே இந்த ஆதார் கார்டு என்பது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; வங்கிக் கணக்கு போன்ற பணம் தொடர்பான விஷயங்களிலும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

நிறையப் பேர் ஆதார் கார்டுகளில் பாதுகாப்பு மீது அதிகக் கவனம் செலுத்துவதில்லை. ஒருவருடைய ஆதார் கார்டை இன்னொருவரிடம் கொடுக்கின்றனர். நிறைய இடங்களில் ஆதார் கார்டை பிரிண்ட் அவுட் எடுக்கின்றனர். அதேபோல, வேலைக்குச் செல்லும் இடத்திலும் பல்வேறு இடங்களிலும் ஆதார் ஆவணத்தைக் கொடுத்துவிடுகின்றனர். இது பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

இதுகுறித்து ஆதார் அமைப்பு (UIDAI) தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், எந்தவொரு நிறுவனத்திடமும் யாரும் தங்களது ஆதார் நகல்களைக் கொடுக்க வேண்டாம். பொது இடங்களில் ஆதார் கார்டை தேவையில்லாமல் டவுன்லோடு செய்ய வேண்டாம். மிக முக்கியமாக, ஆதார் கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க் ஆதார் கார்டைப் பயன்படுத்தும்படி ஆதார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

newstm.in
 

Tags:    

Similar News