நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள் : மதுரை ஆதினம் அதிரடி!!
நடிகர் விஜய் படங்களை பார்க்காதீர்கள் : மதுரை ஆதினம் அதிரடி!!
இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என்று மதுரை ஆதினம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், தற்போது மதுக்கடைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
திருக்கோயில் சொத்துக்கள் இங்கே தொலைந்து போகிறது. உண்மையில் தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரமே திருக்கோயிலுக்குள்தான் உள்ளது. முதலில் அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை?. கோயில் நகைகளை உறுக்குவதாககூட கூறுகிறார்கள். ஆனால் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவே இல்லை.
கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டுள்ளனர்.. ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள் என்றார்.
அறநிலையத்துறை பொல்லாத துறையாக உள்ளது. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோயில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.
இந்துக்களை அவமதிக்கும் வகையிலான திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால், என்னை சங்கி என சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது என பேசினார்.
newstm.in