ரஷ்யா தாக்குதலால் அப்பாவி மக்கள் எத்தனை பேர் பலி தெரியுமா? - ஐ.நா. கவலை

ரஷ்யா தாக்குதலால் அப்பாவி மக்கள் எத்தனை பேர் பலி தெரியுமா? - ஐ.நா. கவலை

Update: 2022-03-07 06:30 GMT

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரை 351 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு வேறு நகரங்களில் குண்டுமழை பொழிந்து வருவதால் அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுவரை 351 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல்களில் 707 போ் காயமடைந்தனா்.

முழுமையாக உறுதி செய்யப்பட்ட பிறகே பலியானவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தொடா் தாக்குதல் நடைபெறுவதாலும் அங்கிருந்து வரும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாததாலும் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 14.5 லட்சம் போ் அண்டைநாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. அகதிகள் நல அமைப்பு கூறியிருப்பதாவது, உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 14.5 லட்சத்தை எட்டியுள்ளது. அந்த நாடுகளின் அமைச்சகங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, போலந்தில் 7,87,300 பேரும் மால்டோவாவில் 1,44,700 பேரும் உக்ரைனிலிருந்து வந்து தஞ்சமடைந்துள்ளனா். இதுதவிர, ருமோனியாவில் 1,32,600 போ், ஸ்லோவாகியாவில் 1,00,500 போ் உக்ரைனிலிருந்து வந்துள்ளனா். 138 நாடுகளைச் சோ்ந்தவா்கள் உக்ரைனிலிருந்து அண்டைநாடுகளுக்கு வெளியேறியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News