கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா..?: மத்திய அரசு விளக்கம்..!
கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா..?: மத்திய அரசு விளக்கம்..!
“இந்தியாவில், கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எத்தனை பேர்..? அவர்களுடைய குடும்பங்களுக்கு அரசால் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்பட்டது..?” என்று, நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ராஜாமணி படேல் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், “இந்தியாவில் கொரோனாவால் 2020 மார்ச் மற்றும் 2021 அக்டோபர் 31-ம் தேதி வரை 4 லட்சத்து 58 ஆயிரத்து 186 பேர் இறந்தனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக அரசு, கொரோனாவால் இறந்தவர் என்று சான்றளிக்கப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க பரிந்துரைத்துள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநிலங்களால் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இது, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்பு ஆகும்.
மேலும், மார்ச் 9, 2022 நிலவரப்படி, கொரோனா காரணமாக மொத்தம் 5,15,355 இறப்புகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.