சென்னை மேயர் பிரியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை மேயர் பிரியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயராக 74ஆவது வார்டில் வெற்றி பெற்ற ஆர்.பிரியா பதவியேற்றுக்கொண்டார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி.
இவரது கணவர் கே.ராஜா, தி.மு.க பகுதி செயலாளராக இருந்து வருகிறார். 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 1957, 1971ஆம் ஆண்டுகளில் தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகிய இருவரும் மேயர் பதவியை அலங்கரித்துள்ளனர். இந்நிலையில் 3ஆவது பெண் மற்றும் முதல் பட்டியலின பெண் மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் இதற்கு முன்பு தென் சென்னையை சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது முதல்முறையாக வட சென்னையை சேர்ந்த பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரியா ராஜனின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அவருக்கு ரூ.8,24,941 மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ளன. அசையா சொத்து மற்றும் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்துகள் அவரிடம் இல்லை.
அவரது கணவர் ராஜாவிடம் ரூ.3,80,179 மதிப்பிலான அசையும் சொத்து உள்ளன. அசையா சொத்துகள் எதுவும் இல்லை. சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட சொத்தின் விலை மதிப்பு ரூ.67,500-ஆக உள்ளது. சுய சம்பாத்திய சொத்து மொத்த மதிப்பு ரூ.1,25,000 ஆக உள்ளது.
இதன் மொத்த மதிப்பு ரூ.5,05,179 ஆக உள்ளது. மேயர் பிரியா ராஜன் தனது வேட்புமனு தாக்கலின் போது இந்த விபரங்களை வழங்கியுள்ளார்.
newstm.in