கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு பூஜை அறையில் எந்த படங்களை வைத்து கும்பிட்டார் தெரியுமா ?
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டு பூஜை அறையில் எந்த படங்களை வைத்து கும்பிட்டார் தெரியுமா ?
1924ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள்
பத்மாவதி அம்மையாரை வழக்கறிஞர் ராகவலு தலைமையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் மு.க.முத்து.
ஆனால், நான்கு ஆண்டுகள் மட்டுமே பத்மாவதியுடன் குடும்பம் நடத்தினார் கருணாநிதி. பத்மாவதி நோய்வாய்ப்பட்டு மரணத்தை தழுவினார். 1948ம் ஆம் ஆண்டு தயாளு அம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது பிள்ளைகள் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, மு.க.ஸ்டாலின், செல்வி. கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள். இவர்களது மகள் கனிமொழி. தயாளு அம்மாளுடன் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்தார். சி.ஐ.டி காலனியில் ராஜாத்தி அம்மாளை குடிவைத்தார்.
கருணாநிதி தன்னை கடவுள் மறுப்பு கொள்கையுடைய பகுத்தறிவுவாதியாக, நாத்திகவாதியாக காட்டிக்கொண்டாலும் அவரது கோபாலபுரம் வீட்டில் பூஜை அறை மடம் ஒன்றையும் அமைத்திருந்தார். ஆனால் அந்த மடத்தில் கடவுள் படங்களுக்கு பதிலாக அவரது தாயார் அஞ்சுகம் அம்மையார், தந்தையார் முத்துவேலர், முதல் மனைவி பத்மாவதி அம்மையார் ஆகிய படங்களை வைத்திருந்தார். முக்கிய நாட்களிலும், மனம் வாடிய தருணங்களிலும் அந்த படங்களுக்கு முன் நின்று கருணாநிதி மனமுருகி சில நிமிடங்கள் நின்று ஆத்மார்த்தமாக அமைதி காப்பதை இறுதிவரை கடைபிடித்து வந்துள்ளார்.