இந்தியாவின் பணக்கார எம்.பி யார்னு தெரியுமா..?

இந்தியாவின் பணக்கார எம்.பி யார்னு தெரியுமா..?

Update: 2022-06-01 05:20 GMT

தெலுங்கானா மாநிலத்தின் ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி, 'ஹைடிரோ' குழுமத்தின் தலைவர் பந்தி பார்த்தசாரதி ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரை ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், பந்தி பார்த்தசாரதி தன் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளார். மருந்து தயாரிப்பு உட்பட பல தொழில்களில் உள்ள ஹைடிரோ குழுமத்தின் தலைவர் பந்தி பார்த்தசாரதிக்கு 3,900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இவர் மனைவியிடம் உள்ள சொத்தையும் சேர்த்தால், 5,300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அவர்கள் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 26 ஆயிரத்து 100 கோடி ரூபாய்.

கடந்த ஆண்டு பந்தி பார்த்தசாரதி குடும்பம் இந்தியாவின் பணக்கார குடும்பங்கள் பட்டியலில் 58வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News