ஜடேஜா-வை தண்டித்த ஷேன் வார்ன்- எதற்காக தெரியுமா?
ஜடேஜா-வை தண்டித்த ஷேன் வார்ன்- எதற்காக தெரியுமா?
ஐபிஎல் திருவிழா தொடங்கியுள்ளது. நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது. 15ஆவது ஐபிஎல் சீசனை சென்னை அணியை ஜடேஜா வழி நடத்திசெல்கிறார்.
இந்நிலையில் ஐபிஎல் முதல் சீசனில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்வதாக குறிபிபட்டுள்ளார் முதல் சீசனில் ஜடேஜாவின் சக வீரரான கம்ரான் அக்மல்.
முதல் சீசனில் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அந்த அணியில் பாகிஸ்தான் கம்ரான் அக்மலும் இடம்பெற்றிருந்தார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திசென்ற ஷேன் வார்ன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.
இது குறித்து கம்ரான் அக்மல் கூறுகையில், பயிற்சியானாலும் சரி மற்றும் அணியின் முக்கிய கூட்டமானாலும் சரி வார்னேவுக்கு எல்லோரும் குறித்த நேரத்துக்கு வந்து விட வேண்டும். ஆனால் ஒருநாள் அணியினர் பயிற்சிக்கு கிளம்பிய போது யூசுப் பதான் மற்றும் ஜடேஜா சரியான நேரத்துக்கு வரவில்லை. கொஞ்சம் லேட்டாக வந்திருந்தார்கள். அதனால் பேருந்து புறப்படுவதில் கொஞ்சம் தாமதம். அப்போது வார்னே எதுவும் சொல்லவில்லை. பயிற்சி முடிந்து எல்லோரும் பேருந்தில் விடுதிக்கு திரும்பினோம்.
அப்போது பேருந்தை நிறுத்த சொன்ன வார்னே ஜடேஜா மற்றும் பதானை நடந்தே விடுதிக்கு வர சொல்லி இறக்கி விட்டார், என தெரிவித்துள்ளார் அக்மல். வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
newstm.in