அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்து ஏன் தெரியுமா..?: அமைச்சர் சொன்ன அடடே விளக்கம்..!

அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்து ஏன் தெரியுமா..?: அமைச்சர் சொன்ன அடடே விளக்கம்..!

Update: 2022-04-07 18:00 GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்று (7-ம் தேதி) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது, அதிமுக ஆட்சியில், வேலைக்கு போகும் பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா இருசக்கர வாகன திட்டம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், “பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, மகளிருக்கான இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்தால் அது மகளிருக்கு கூடுதல் சுமையாக இருக்கும்.

திமுக ஆட்சியில், பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டமே மகளிருக்கு உதவியாக இருக்கும்” என்று விளக்கம் அளித்தார்.

Similar News