பாக்யராஜ்க்கு குழந்தைகளின் வலி, பெற்றோர் வலி தெரியுமா? - எழும் கண்டனம் !!
பாக்யராஜ்க்கு குழந்தைகளின் வலி, பெற்றோர் வலி தெரியுமா? - எழும் கண்டனம் !!
மோடியை விமர்சிப்போர் குறைபிரசவத்தில் பிறந்தோர் என நடிகர் பாக்யராக் பேசியதற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக்நாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022 என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, அதனை நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பேசிய நடிகர் பாக்யராஜ், எப்படி சென்றாலும் செயல்பட்டாலும் பிரதமர் மீது விமர்சனங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள, பிரதமருக்கு நான் ஒரு சின்ன டிப்ஸ் தருகிறேன். விமர்சனம் பண்றவங்க எல்லாருமே 3 மாசம் குறைபிரசவத்துல பிறந்தவங்கனு நினைச்சுகோங்க.
ஏன் 3-மாசம்னு சொல்றேன்னா... 4-வது மாசம்தான் ஒரு சிசுவுக்கு வாய் உருவாகும். 5வது மாசம்தான் காது உருவாகும். வாயும் சரியா வரலை, காதும் சரியா கேட்காதவங்களைதான் 3-வது மாசமே பிறந்த `குறைபிரசவ’ குழந்தைனு சொல்றேன். இப்படியானவங்க நல்லதை அவங்களும் பேசமாட்டாங்க; நல்லது சொன்னா அதை காது கொடுத்தும் கேட்க மாட்டாங்க, என்று விமர்சித்தார்.
நடிகர் பாக்யராஜ் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வகையில், குறைபிரசவ குழந்தைகளை பாக்யராஜ் விமர்சித்ததற்கு டிசம்பர் 3 இயக்க தலைவர் தீபக்நாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்ச்சி
அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? Why do you want to denigrate disability? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். Respect psychosocial disabilities!, என்று தெரிவித்துள்ளார்.
மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்ச்சி pic.twitter.com/pI3xAw2S8E
— பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) April 20, 2022
newstm.in