நாய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம்.. காவல்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி !!
நாய்க்கு கேக் வெட்டி கொண்டாட்டம்.. காவல்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி !!
செல்லப்பிராணிகளாக, நாய்கள் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகின்றன. நாய்களை வளர்ப்பவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் அவற்றை நேசிக்கிறார்கள். அதேநேரத்தில் நாய்க்கு மோப்ப சக்தி அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் உலகம் முழுவதும் காவல்துறை பிரிவிலும் நாய் அசத்தி கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் துப்பறியும் நாய் படைப்பிரிவில் 11 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய நாய் லூசிக்கு, காவலர்களால் கேக் வெட்டி பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
வேலூரில் துப்பறியும் நாய் படைப்பிரிவில் பணியாற்றியது மோப்பா நாய் லூசி. கடந்த 11 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மோப்ப நாய் லூசி ஓய்வு வயதை எட்டியதைடுத்து அதனை துப்பறியும் நாய் படைப்பிரிவில் இருந்து விடுவித்தனர். அந்த வகையில் அதற்கு வேலூரில், கேக் வெட்டி பணி நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
கடந்த 2011 முதல் 2022 வரை திறம்பட பணியாற்றிய மோப்ப நாய் லூசி, 2014ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பறியும் நாய்களின் வெடிகுண்டு சோதனை செய்யும் போட்டியில் பதக்கத்தை வென்றது. லூசியின் பணி நிறைவு நாளையொட்டி வேலூர் துப்பறியும் நாய் படை பிரிவினர் லூசிக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினர்.
அவை தொடர்பான புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
newstm.in