இன்னைக்கு நகைக்கடை பக்கம் போயிடாதீங்க.. உச்சம் தொட்டது தங்கம் விலை..!

இன்னைக்கு நகைக்கடை பக்கம் போயிடாதீங்க.. உச்சம் தொட்டது தங்கம் விலை..!

Update: 2022-07-01 11:36 GMT

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழலால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கள் முதலீடுகளை தங்கத்தில் மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று (1-ம் தேதி) தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் 856 ரூபாய் உயர்ந்து, 38,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராமின் விலை இன்று 107 ரூபாய் உயர்ந்து, 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Similar News