வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இந்த 11 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்..!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இந்த 11 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்..!!

Update: 2022-02-13 05:10 GMT

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. அதேபோல தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஒன்றிய -மாநில அரசு, ஒன்றிய- மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற-சட்டமன்ற -சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்டவை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News