கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே வங்கிக் கணக்கை மாற்றலாம்..!

கால் கடுக்க காத்திருக்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே வங்கிக் கணக்கை மாற்றலாம்..!

Update: 2022-07-06 12:40 GMT

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கை ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவதற்கு மணிக்கணக்கில் வங்கிகளில் காத்திருக்காமல், வீட்டில் இருந்தே YONO SBI மற்றும் SBI இணையதளத்தின் மூலம் மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எப்படி மாற்றுவது என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்து கொள்வோம்.

YONO SBI-யைப் பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றம் செய்யும் முறை:

1- முதலில், உங்கள் செல்போனில் YONO SBI-யை லாகின் செய்யவும்.

2- அடுத்ததாக Service என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3- பின்னர் சேமிப்புக் கணக்கை மாற்றுதல் (Transfer of Saving Account) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

4- பிறகு, உங்கள் கணக்கை மாற்ற விரும்பும் வங்கி கிளையின் புதிய குறியீட்டை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் Get branch என்ற பெயரை கிளிக் செய்தால் புதிய கிளையின் பெயரை காண முடியும்.

5- இதை நீங்கள் செய்து முடித்ததும், உங்கள் கணக்கை மாற்றுகிறீர்களா? என கேட்கும் போது செல்போனுக்கு வரும் ஓடிபி-யை (OTP) டைப் செய்து சப்மிட் (submit) பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்கள் சேமிப்பு கணக்கை வேறு கிளைக்கு மாற்றிவிடலாம்.

SBI இணையதளத்தை பயன்படுத்தி வங்கி கிளையை மாற்றம் செய்யும் முறை:

1- முதலில், எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள்.

2- பின்னர் Menu bar-ல் உள்ள E-service என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3- இதன்பிறகு Transfer the saving account என்பதை கிளிக் செய்யவும்.

4- இதையடுத்து உங்கள் வங்கி கோடு மற்றும் டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கும் கிளையின் கோடு இரண்டையும் டைப் செய்யவும்.

5- பின்னர், Read and accept என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சப்மிட் கொடுத்த பின்னர் கன்பார்ம் செய்யும் முன்னர் நீங்கள் கொடுத்த தகவல் அனைத்தும் சரியா என்பதை பார்த்துக் கொள்ளவும்.

6- இறுதியில், உங்கள் செல்போனுக்கு வந்த ஓடிபி-யை சரிபார்த்து confirm பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, உங்கள் சேமிப்பு கணக்கு வேறு கிளைக்கு மாறிவிடும்.

Similar News