நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!!

நாட்டின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!!

Update: 2022-07-21 20:29 GMT

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதில் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரௌபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

பரபரப்பான சூழலில் கடந்த 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்.பி.க்களும், நாடு முழுவதும் 30 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் எம்.எல்..க்களும் வாக்களித்தனர்.

இந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்த திரௌபதி, மூன்று சுற்றுக்களின் முடிவில் 70 சதவீத வாக்குகளை பெற்றார். இதன்மூலம் இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட உள்ளார்.

newstm.in

Similar News